5.மெய்ப்பொருள் (கார்த்திகை, உத்திரம்
மெய்ப் பொருள் நாயனார் (கார்த்திகை - உத்திரம்)
நடுநாடு மலையமான் (அரசர் - சங்கம வழியாடு
முத்தித் தலம் : திருக்கோவிலூர்
திருக்கோவிலூரில் அவதரித்து அவ்வூரை ஆட்சி செய்த
மெய்ப்பொருள் நாயனார் ஒரு சிவபக்தர். அடுத்த நாட்டு மன்னனான
முத்தநாதன் மெய்பொருளாரை வஞ்சகமாக வீழ்த்த எண்ணி,
சிவனடியார் போல வேடமிட்டு உடைவாளை ஒரு புத்தகக்கட்டுக்குள்
வைத்துக் கொண்டு மெய்பொருளாரைச் சந்தித்தார். அவரும்
அடியாரை வரவேற்க அடியார் தான் சிவபொருமான் ஓதிய ஆகம்:
நூலை வாசிக்க நீங்கள் கேட்க வேண்டுமென்று கூற,
மெய்ப்பொருளாரும் பணிவுடன் படியுங்கள் என்றார். அச்சமயத்தில்
சிவனடியார் வேடம் கொண்ட முத்தநாதன் மெய்பொருளாரைக்
குத்தி வீழ்த்த முத்தநாதனைக் கொல்ல வந்த காவலர்களைத் தடுத்து
அடியார் வேடத்தில் வந்த அவரைக் கொல்வது பாவம் என்று கூறி
ஊர் எல்லை வரை கொண்டுவிடச் சொன்னார் ஊர் எல்லை வரை
அனுப்பிய செய்தி கேட்ட பின் மெய்பொருளார் உயிர் போயிற்று.
சிவனடியார்களிடம் வைத்த பக்தியைக் கண்டு வியந்து மெய்பொருளாருக்குச் சிவபெருமான் முக்தி கொடுத்தார்.
Comments
Post a Comment